திருவள்ளூர்:திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ரவேலு வனத்துறையில் பணியாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் திருத்தணி அடுத்த தாழ்வேடு கிராமத்தில் அவரது விவசாய நிலத்தில் அரசு அனுமதியுடன் செம்மரம் பயிர் சாகுபடி செய்திருந்தார். நன்கு வளர்ந்த செம்மரங்களை அவரது மனைவி ராணி வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, வெட்டி விற்பனை செய்துள்ளார்.
அந்த மரத்தின் வேர்களை விவசாய நிலத்திலிருந்து பிடுங்கி அங்குள்ள குடோனில் வைத்திருந்தனர். இருப்பினும் அவற்றை விற்பனைக்கு உரிய அனுமதி பெறாத நிலையில், விற்பனை செய்து தருவதாகக் கூறி அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற இடைத்தரகர் ஆந்திர மாநிலம், புத்தூர் பகுதியை சேர்ந்த நாராயண ரெட்டி, துரைவேல், சீனு ஆகியோர் மூலம் செம்மர வேர்கள் விற்பனை தொடர்பாக செம்மரம் கடத்தல் ஏஜென்டு உடன் பேசியுள்ளனர்.