திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பாரண்டப்பள்ளி கூட்டு ரோடு அருகே விவசாய நிலத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் அதியமான் கவியரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நாட்றம்பள்ளி தாசில்தார் சுமதி தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் அங்கு சென்று நிலத்தில் துவரை செடிகளின் மறைவில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் அளவிலான 65 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.