தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே விசாகப்பட்டினத்திலிருந்து, கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்செய்யப்பட்டு இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Dec 18, 2021, 2:02 PM IST

திருப்பத்தூர்:ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கேரளாவுக்கு லாரியில் 31 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அவ்வழியாக வந்த லாரி ஒன்றை சோதனை செய்ததில், அதில் 31 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து லாரியிலிருந்த தருமபுரியைச் சேர்ந்த தமிழரசன், அக்நல் ஆகியோரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின்னர் பறிமுதல்செய்யப்பட்ட லாரி, 31 டன் ரேஷன் அரிசியை ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை நுகர்ப்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:திருமணமாகாத விரக்தி: தாயைக் கொன்ற மகன் கைது

ABOUT THE AUTHOR

...view details