தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் அமமுக பிரமுகர் கொலை: மூவர் வேலூர் நீதிமன்றத்தில் சரண்! - திருப்பத்தூர் அமமுக பிரமுகர் கொலை

திருப்பத்தூரில் அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூன்று பேர் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

3-were-surrender-in-vellore-for-ammk-cadre-murder-case
திருப்பத்தூர் அமமுக பிரமுகர் கொலை: மூவர் வேலூர் நீதிமன்றத்தில் சரண்

By

Published : Feb 23, 2021, 9:56 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் கௌதமபேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் வானவராயன் (30). அமமுக மாவட்ட மாணவரணி செயலாளரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான சங்கர் என்பவருக்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக கூலிப்படை மூலம் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக சங்கர், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏழு பேரை திருப்பத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த கூலிப்படையைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மூன்று பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த கௌதமபேட்டையைச் சேர்ந்த பிரபா(எ) பிரபாகரன் (39), இவரது தம்பி அரவிந்தன் (26), ரபீக் (எ) நந்தகுமார் (25) ஆகிய மூவரும் நேற்று (பிப்ரவரி 22) வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-இல் நீதிபதி முகிலாம்பிகை முன்பு சரணடைந்தனர்.

இதனையடுத்து மூன்று பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பிப்ரவரி 25ஆம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:முத்துப்பேட்டையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை - காவல்துறையினர் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details