தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் லாரியில் முன் சக்கரம் முறிந்து விபத்து; வாணியம்பாடியில் மூவர் படுகாயம்! - கீரை லாரி கவிழ்ந்து விபத்து

வாணியம்பாடி அருகே கீரை மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி 15 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான லாரி
விபத்துக்குள்ளான லாரி

By

Published : Dec 15, 2022, 8:30 AM IST

திருப்பத்தூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி இருந்து சென்னை நோக்கி கீரை மூட்டைகளை ஏற்றுக்கொண்டு லாரி சென்று ஒன்று கொண்டு இருந்தது. வாணியம்பாடி பைபாஸில் சென்றுக்கொண்டிருந்த போது லாரியின் முன் சக்கரம் உடைந்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தில் இருந்து 15 அடி பள்ளத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் தலைகீழாக
விழுந்தது விபத்துக்குள்ளானது.

இதில் லாரியை ஒட்டி வந்த சூளகிரியைச் சேர்ந்த ஓட்டுனர் கணேசன் (வயது 30), கிளீனர் கோவிந்தராஜ் (வயது 26) மற்றும் சர்வீஸ் சாலையில் நடந்து சென்ற ஒருவர் என 3 படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக வாணியம்பாடி- வேலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அரிய வகை விலங்குகளும் 1 கிலோ தங்கமும்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details