தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் மருத்துவமையில் அனுமதி.. ஒருவர் கவலைக்கிடம்! - vibaththu

வாணியம்பாடி தனியார் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஒருவர் கவலைக்கிடம்
ஒருவர் கவலைக்கிடம்

By

Published : Jun 17, 2022, 9:32 AM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி கச்சேரி சாலையில் வாணி டெக் என்னும் தோல் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள பொது தோல் கழிவு சுத்திகரிப்பு அறையில் 50 அடி ஆழத்தில் உள்ள கழிவு நீர் தரம் பிரித்து சுத்திகரிக்கும் குழாய் பழுதடைந்துள்ளது. அதனைச் சரி செய்ய தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணிபுரியும் நவீன் குமார், மணிகண்டன், ரவிக்குமார் மற்றும் சுதாகர் ஆகியோர் நேற்று மாலை 4 மணியளவில் இறங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது குழாயில் இருந்து அதிக அளவு விஷவாயு வெளியானதால் நவீன்குமார் 50 அடி ஆழத்தில் மயங்கியகமடந்துள்ளார். மேலும் மணிகண்டண் மற்றும் ரவிகுமாருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூவரையும் மீட்ட சுதாகர் உடனிருந்த பணியாளர்களுடன் மூவரையும் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தோல் தொழிற்சாலையில் வெளியாகிய விஷவாயு தாக்கி 3 பேர் மருத்துவமையில் அனுமதி ஒருவர் கவலைக்கிடம்

மருத்துவமனையில், மணிகண்டன் மற்றும் ரவி குமாருக்கு சிகிச்சையளித்து வரும் நிலையில் நவீன்குமாரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கிய சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராம காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சாலையில் படுகாயத்துடன் கிடந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளி - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details