தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சமூக விரோதிகளால் கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி உணவு பாதுகாப்புத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

ரயிலில் கடத்த பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ரயிலில் கடத்த பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Jan 23, 2022, 7:16 PM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையை அடுத்த சோம நாயக்கன்பட்டி நிலையத்தில் வேலூர் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பிளாட்பாரங்களில் ஆங்காங்கே வெளி மாநிலத்திற்கு கடத்த, அடையாளம் தெரியாத நபர்கள் அரிசியை மூட்டை மூட்டைகளாக ரயிலில் கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்தனர்.

இந்த நிலையில், அலுவலர்களைக் கண்டதும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் பிளாட்பாரங்களில் இருந்து தப்பி ஓடினர்.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் ரயிலில் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து வேலூர் வாணிப உணவு கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:விவசாய நிலத்தில் பிடிபட்ட10 அடி நீள மலைப்பாம்பு!

ABOUT THE AUTHOR

...view details