சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். சிறுவர்கள் குளித்து கொண்டிருந்த போது காலில் ஏதோ தென்பட்டுள்ளது. உடனடியாக நீரில் மூழ்கி பார்த்ததில் பெருமாள் மற்றும் 2 அம்மன் சிலைகளை கண்டறிந்தனர். இதையடுத்து வாணியம்பாடி வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, கிராம உதவியாளர் பரந்தாமன் ஆகியோர் 3 சிலைகளையும் மீட்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவை பழங்கால சிலைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.