தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்துக்குள்ளான லோடு ஆட்டோவில் இருந்து 2000 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் - போலீஸ் விசாரணை - 2000 kg Gutka seized in ampur

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளான லோடு ஆட்டோவில் இருந்து 2000 கிலோ குட்கா மற்றும் போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

auto accident
auto accident

By

Published : Dec 8, 2020, 10:14 AM IST

ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோ சாலையின் தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்குள்ளான லோடு ஆட்டோவை மீட்டு ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்திற்கு எடுத்துவந்த காவல்துறையினர், லோடு ஆட்டோவில் சோதனை மேற்கொண்டபோது அதில் தடைசெய்யப்பட்ட 2000 கிலோ (2 டன்) குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர், கிளீனரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கஞ்சா புகைக்கும் சிறார்கள்; வெளியான அதிர்ச்சி காணொலி!

ABOUT THE AUTHOR

...view details