திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் சுண்ணாம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை விமான போக்குவரத்து மேலாண்மை இறுதியாண்டு படித்து வந்தார். இவரது நண்பரான ராகுல் (21), இவர் இளங்கலை வணிகவியல் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி வந்தார். இருவரும் தீபாவளி விடுமுறைக்காக தனுஷின் சொந்த ஊரான ஆலங்காயம் அருகே உள்ள சுண்ணாம்புபள்ளம் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குளத்தில், நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளனர். அப்போது ராகுல் குளத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் இருவரும் மூழ்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் குளத்தின் அருகே வந்து பார்த்துள்ளனர். அப்போது அவர்களது உடைகளை கண்டு சந்தேகமடைந்து, ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.