திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் ஆட்டோவில் வைத்து தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டத்தில் பலரும் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் உம்ராபாத் காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவலர்கள், அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மறைவான இடத்தில் ஆட்டோவில் வைத்து வெளிமாநில லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 5 பேரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆம்பூர் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பர்வேஸ் அஹமத், புதுமனை பகுதியைச் சேர்ந்த கபில் அஹமத் ஆகிய இருவரும் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் அன்றாட கூலி தொழிலாளர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்துவது தெரியவந்தது.