தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 13) 238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மற்றும் ஏலகிரி மலை தனியார் கல்லூரிகலில் அமைக்கப்பட்டுள்ள் நீட் தேர்வு மையங்களில் 1800 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.
முன்னதாக, மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு வருவதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் 33 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் தேர்வெழுத வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி கொடுக்கப்பட்டது.