தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.பி.வேலுமணி உறவினருக்குச் சொந்தமான மஹாலில் 14 ஆவணங்கள் பறிமுதல்? - எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான ஏவிஆர் ஸ்வர்ண மஹால்

திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினருக்குச் சொந்தமான ஏ.வி.ஆர் ஸ்வர்ண மஹாலில் நடைபெற்ற சோதனையில் 14 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏவிஆர் ஸ்வர்ண மஹாலில் 14 ஆவணங்கள் பறிமுதல்?
ஏவிஆர் ஸ்வர்ண மஹாலில் 14 ஆவணங்கள் பறிமுதல்?

By

Published : Mar 16, 2022, 2:59 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள 6 மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்கள், அவரது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெற்றது.

குறிப்பாக எஸ்.பி.வேலுமணி உறவினரான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் திருப்பத்தூரில் நடத்திவரும் ஏவிஆர் ஸ்வர்ண மஹாலில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

ஏவிஆர் ஸ்வர்ண மஹாலில் 14 ஆவணங்கள் பறிமுதல்?

இந்தச் சோதனையானது 14 மணி நேரம் நீடித்தது. சோதனை முடிவில், 14 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:"யாரும் அதிமுகவினரை மிரட்ட முடியாது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details