திருப்பத்தூர்:சோமலாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் இன்று(நவ.16) சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.