தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடி அருகே சிறுமி கூட்டு பாலியல் வண்புணர்வு: மூவர் கைது - திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை கூட்டு பாலியல் வண்புணர்வு செய்ய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

vaaniyampadi
vaaniyampadi

By

Published : Mar 9, 2020, 12:10 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் பெற்றோரை இழந்த 12 வயது சிறுமி ஒருவர் காப்பாளர் கண்காணிப்பில் வளர்ந்துவருகிறார். ஆறாம் வகுப்பு படித்துவரும் அச்சிறுமி, கடந்த 6ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க அருகிலுள்ள பாலாற்றங்கரைக்குச் சென்றுள்ளார்.

அந்த வேளையில் ஆற்றங்கரையோரம் மது அருந்திக்கொண்டிருந்த மூன்று இளைஞர்கள், அச்சிறுமியை உடைந்த பீர் பாட்டிலால் 'உன்னைக் குத்திக்கொலை செய்துவிடுவோம்' என மிரட்டி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வண்புணர்வு செய்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்த தப்பிய அந்தச் சிறுமி, அவரின் காப்பாளரிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். அதைத்தொடர்ந்து காப்பாளர் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தார்.

குற்றவாளிகளை கைது செய்த போது

புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், சந்துரு (24), பார்த்திபன் (21) கண்ணன் (30) ஆகிய மூவரைக் கைதுசெய்தனர். அவர்கள் மூவர் மீதும் கடத்தல், கொலை முயற்சி, கூட்டு பாலியல் வன்புணர்வு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை

ABOUT THE AUTHOR

...view details