திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது கோழிப்பண்ணையில் இன்று மாலை 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. பண்ணையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பினை கண்ட வெங்கடேசன் உடனடியாக இதுகுறித்து ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.