தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு திருட்டில் ஈடுபட்ட 11 பேர் கைது - காவல்துறை அதிரடி - Breaking the showroom lock and stealing

திருப்பத்தூர்: பல்வேறு திருட்டில் ஈடுபட்ட 11 பேரை துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூரில் பல்வேறு திருட்டில் ஈடுப்பட்ட 11நபர்கள் கைது
திருப்பத்தூரில் பல்வேறு திருட்டில் ஈடுப்பட்ட 11நபர்கள் கைது

By

Published : Sep 8, 2020, 4:15 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் தூயநெஞ்சக் கல்லூரி அருகில் அமைந்துள்ள டார்லிங் டிவி ஷோ ரூமில் கடந்த 4ஆம் தேதி ஷோரூமின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப்பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சதீஸ், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மாதேஷ், ராகவேந்திரன், வீரமணி, விஸ்வா, சுதாகர் உள்ளிட்ட 11 நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி அவர்களிடமிருந்த 30 விலை உயர்ந்த செல்போன்கள், 9 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details