திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழனி ஆண்டவர் முருகன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த ஆண்டு தைப்பூசம் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டும் ஒரே நாளில் வருவது சிறப்பு.
வாணியம்பாடி பழனியாண்டவர் முருகர் கோயிலில் தைப்பூச விழா - 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழனியாண்டவர் முருகர் ஆலயம்
திருப்பத்தூர்: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழனியாண்டவர் முருகர் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனியாண்டவர் முருகர் கோயில் தைப்பூச விழா
இதில் பழனியில் வைக்கப்பட்டுள்ள பழனி ஆண்டவர் சிலை அமைப்பை போன்று இங்கு வைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைப்பதாலும், பழனிக்கு செல்ல முடியாதவர்கள், சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:ஸ்ரீ வீரராகவர் கோயிலில் தை மாத பிரம்மோற்சவம்!