திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா சாலையில், குடோனில் காய்கறிகளை பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசியத் தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், குடோனில் காய்கறிகளை பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்டது தெரியவந்தது. இதன்பின்னர், ஊரடங்கு உத்தரவை மீறியும் காய்கறிகளை பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்ட காய்கறிக் கடை, பழக்கடை, மளிகைக் கடை உள்பட 10 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.