தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்கள் அறிய தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - எல்.முருகன் - தேசியகொடி

தமிழ்நாட்டில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பது கவலை கொள்ளும் விதமாக இருக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்கள் அறிய தேசியகொடி ஏற்ற வேண்டும் - எல்.முருகன்
தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்கள் அறிய தேசியகொடி ஏற்ற வேண்டும் - எல்.முருகன்

By

Published : Aug 12, 2022, 3:42 PM IST

தூத்துக்குடி:இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், ”பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியினை அனைத்து வீடுகளிலும் ஏற்றுவதற்காக வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசம் முழுவதுமே தினந்தோறும் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. அதன் படி, பாரதியார் மணி மண்டபத்தில் பாரதியாருக்கு மரியாதை செய்ய இருக்கின்றோம்.

பாரத தேசத்திற்காக பாடுபட்ட முன்னோர்கள் பற்றியும், தியாகிகள் பற்றியும் இளைஞர்கள் அறிய தேசியக்கோடி ஏற்ற வேண்டும். தேசியக்கொடியின் மகிமையும், பெருமையும் கொடிகாத்த குமரனுக்கே சாரும்... இறக்கும் தருவாயில் கூட தேசிய கொடியுனை கைகளில் ஏந்தினார், அது தமிழ்நாட்டிற்குப் பெருமை. நம்முடைய அனைத்து வீடுகளிலும், சகோதர, சகோதரிகள், உறவினர்கள் அனைவரும் 13ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை அவர்களுடைய வீட்டில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

போதைப்பொருளை ஒழிப்பது மிகவும் முக்கியம், தமிழ்நாட்டில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பது கவலை கொள்ளும் விதமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசாங்கம் முக்கியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். மின்சார சட்ட மசோதாவில் நாட்டில் பல சீர்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மின்சாரத்திருத்தச்சட்டம் இலவச மின்சாரத்தை நிறுத்துங்கள் என்றுசொல்லவில்லை. சட்டம் வர இருக்கிறது, அச்சட்டம் வந்த பின்பு தான் தெரியும்.

நம்முடைய இளைஞர்கள் இன்றைக்குத் தானாக முன்வந்து ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது. பல பேர் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து வந்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பல லட்சம் இளைஞர்கள் தானாக முன்வந்து தங்களைப்பதிவு செய்து கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை காசிமேடு துறைமுகத்தை புதுப்பிக்க டெண்டர் விடப்படப்படவுள்ளது” என்றார்.

தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்கள் அறிய தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - எல்.முருகன்

இதையும் படிங்க:பட்டியலின ஊராட்சித்தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றமுடியாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதவும்!

ABOUT THE AUTHOR

...view details