தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிப்காட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் வெட்டிக்கொலை
இளைஞர் வெட்டிக்கொலை

By

Published : Oct 20, 2020, 3:05 PM IST

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் அருகே முட்செடிகள் நிறைந்த காலியிடத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக இன்று (அக்.20) காலை சென்றனர்.

அப்போது முட்புதர்களுக்கு நடுவே அடையாளம் தெரியாத இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த சிப்காட் காவல் துறையினர், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், "கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் கணேசன் நகரைச் சேர்ந்த கதிரேசன் (35) என்பவர், நேற்றிரவு (அக்.19) நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மீளவிட்டான் பகுதியில் மது குடிப்பதற்காக வந்ததும்,

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து கதிரேசனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதும்" தெரியவந்துள்ளது. மேலும் இளைஞரின் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

ABOUT THE AUTHOR

...view details