தூத்துக்குடி: மாவட்டம் புதூர் குமாரகிரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சூரிய ராகவன் (31). இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சூரியராகவன் எட்டயபுரத்தில் டிவி பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று (அக்.20) காலை வழக்கம் போல் சூரியராகவன் கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் சூரியராகவன் மீது மிளகாய் பொடியை தூவி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இந்த கொலை தொடர்பாக எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆனந்தராஜ் வாக்குமூலத்தில் கூறியதாவது, "மகாலட்சுமியும் நானும் உறவினர்கள். பள்ளி படிக்கும் போதே அவளை நான் காதலித்து வந்தேன். ஒரு நல்ல வேலைக்கு சென்றுவிட்டு மகாலட்சுமி பெற்றோரிடம் திருமணம் குறித்து பேசலாம் என நினைத்தேன். வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றேன். சொந்த ஊருக்கு திரும்பியபோது மகாலட்சுமி சூரியராகவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.