தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வளர்ப்பு நாயை திட்டியதால் ஏற்பட்ட தகராறு... திருச்செந்தூரில் இளைஞர் வெட்டிக்கொலை - திருச்செந்தூர் கொலை

வளர்ப்பு நாயை திட்டி விரட்டியதில் ஏற்பட்ட தகராறினால், திருச்செந்தூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tiruchendur murder  thoothukudi district news
வளர்ப்பு நாயை திட்டியதால் ஏற்பட்ட தகராறு... திருச்செந்தூரில் வாலிபர் வெட்டிக்கொலை

By

Published : Oct 6, 2020, 2:16 PM IST

தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் வசித்துவருபவர் பால்லிங்கம் (26). இவர் வளர்த்து வந்த நாயை அதே தெருவைச் சேர்ந்த லிங்கராஜ் (27) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 2017ஆம் ஆண்டு விரட்டியடித்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த பால்லிங்கம், லிங்கராஜூடன் சண்டையிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் தலையிட்டு இருவருக்கும் இடையேயான பிரச்னையை விலக்கிவைத்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீரா பகை உணர்வுடன் சுற்றிவந்த லிங்கராஜ், பால்லிங்கத்தை கொலை செய்ய திட்டமிட்டு தக்க சமயத்திற்காக காத்திருந்துள்ளார்.

இந்நிலையில், சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு பாரத ஸ்டேட் வங்கியருகே வந்துகொண்டிருந்த பால்லிங்கத்தை, லிங்கராஜ் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்தவெள்ளத்தில் சரிந்த பால்லிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பால்லிங்கத்தின் உடலை உடற்கூராய்வு செய்வதற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் லிங்கராஜ், ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் சரணடைந்தார். கைதுசெய்யப்பட்ட லிங்கராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details