தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சரவணகுமார் (28). இவர் நேற்றிரவு (ஆக. 20) புதிய பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை பலத்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.
இதில், படுகாயமடைந்த சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வடபாகம் காவல் துறையினர், சரவணகுமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மனோ, துரைசாமி, கார்த்திக் உள்பட இரண்டு சிறுவர்கள் என ஐந்து பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.