தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 அறிகுறியுடன் வந்த ஒடிசா இளைஞர் மருத்துவமனையில் அனுமதி! - youngster from odisha admitted in hospital with corona symptoms

தூத்துக்குடி: கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அதிக காய்ச்சல், இருமல், மூச்சு திணறலுடன் ஒரிசாவில் இருந்து வந்த இளைஞர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

odisha admitted in hospital with corona symptoms
odisha admitted in hospital with corona symptoms

By

Published : Mar 19, 2020, 2:37 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சாத்தூர் என். சுப்பையாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக ஒடிசா மாநிலத்திலிருந்து காளி என்ற 18 வயது இளைஞர் நேற்றிரவு ரயில் மூலம் வந்துள்ளார்.

வந்தது முதல் காளிக்கு அதிக காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் இருந்த காரணத்தினால் அங்கிருந்தவர்கள் ஏழாயிரம்பண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது

கரோனா அறிகுறியுடன் ஒடிசாவில் இருந்து வந்த இளைஞர்

தொடர்ந்து கோவிட்-19 தொற்றுக்கான சில அறிகுறிகள் அவரிடம் தென்பட்ட காரணத்தினால் அது குறித்த ஆய்வு, மேல் சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காளி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் வேண்டுகோள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details