தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிச்சயிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது - போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி: தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Arrested under pocso Law
Arrested under pocso Law

By

Published : Jan 23, 2020, 1:10 PM IST

Updated : Jan 23, 2020, 3:06 PM IST

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). கூலித்தொழிலாளியான இவருக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலை இரு வீட்டுப் பெற்றோரிடமும் எடுத்துக்கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜேஷுக்கும், சிறுமிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையாத காரணத்தால் வயது பூர்த்தியாகும் வரை திருமணத்திற்கு காத்திருக்கும்படி இருவீட்டு பெரியோர்களும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ராஜேஷ், தனக்கு நிச்சயமான சிறுமியுடன் ஊர் சுற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சிறுமியை அழைத்துச் சென்று அவருடன் பாலியல் உறவு கொண்டதாகத் தெரிய வருகிறது.

போக்சோவில் கைது செய்யப்பட்ட இளைஞர் ராஜேஷ்

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் தூத்துக்குடி அருகில் உள்ள புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் சிறுமிக்கு நிச்சயக்கப்பட்ட ராஜேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு; காதலியின் தந்தையை காரில் கடத்த முயற்சி - காதலன் உட்பட 4 பேர் கைது

Last Updated : Jan 23, 2020, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details