தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்குக் கடல் அட்டைகள் கடத்த முயற்சி - இளைஞர் கைது!

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக 50 கிலோ கடல் அட்டைகளை இலங்கைக்குக் கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இலங்கைக்குக் கடத்த முயற்சி: சட்டவிரோதமாக 50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!
இலங்கைக்குக் கடத்த முயற்சி: சட்டவிரோதமாக 50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

By

Published : May 18, 2021, 2:20 PM IST

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல் அட்டைகள், மஞ்சள், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக கடலோர காவல் படையினர், மரைன் எண்போர்ஸ்மெண்ட் பிரிவு மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் மொட்டைக்கோபுரம் கடற்கரையில் ஊறலுக்காக 50 கிலோ கடல் அட்டை கடத்தப்படவிருப்பதாக தருவைகுளம் என்போர்ஸ்மெண்ட் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த உதவி ஆய்வாளர் முத்துமாரி தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, படகிலிருந்து 3 வாளிகளில் கடல் அட்டைகளை கடத்த முயன்ற நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் திரேஸ்புரம் அருகே உள்ள லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஷேக் மைதீன் (28்) என்பது தெரிய வந்தது. இவர் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகளை உயிருடன் வாளிகளில் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மைதீனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details