தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணிப் படுக்கையின் மீது 71 ஆசனங்கள் செய்து உலக சாதனை படைத்த தமிழன்! - வேல்டு புக் ஆப் ரிக்கார்ட்ஸ்

தூத்துக்குடி: கோவில்பட்டியில், ஆணிப் படுக்கையின் மீது 71 ஆசனங்கள் செய்து உலக சாதனை செய்த தியாகராஜாவை(54) பாராட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

yoga function

By

Published : Sep 28, 2019, 2:36 PM IST

ஆம்காட் நிறுவனம், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக தியாகராஜா (வயது 54) என்பவர் ஆணிப் படுக்கையின் மீது 71 ஆசனங்கள் செய்து உலக சாதனை படைத்தார்.

இதனைதொடர்ந்து வேல்டு புக் ஆப் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட உலக சாதனை சான்றிதழை தியாகராஜாவிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஆம்காட் நிறுவனத் தலைவர் விக்ரம் சூர்யவர்மா தலைமை வகித்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கோட்டாட்சியர் விஜயா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் பார்க்க: நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து ஆச்சரியப்படுத்திய சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details