தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்றுகள் வழங்கிய ஆட்சியர் - Toothukudi latest News

தூத்துக்குடி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

World Environment Day
World Environment Day

By

Published : Jun 5, 2020, 9:57 PM IST

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் எம்பவர் இந்தியா அமைப்பு சார்பில், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள், மரக்கன்றுகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பேருந்தின் முன்பு, விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தினார்.

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது.

மாவட்டத்தின் காயல்பட்டினம், தென்திருப்பேரை உள்ளிட்டப் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தென்திருப்பேரையில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலான பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை. நோய்த் தடுப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. வருகிற 7ஆம் தேதி மாலத்தீவில் இருந்து தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் 700 பேருடன் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வந்தடைகிறது.

அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யும் பொருட்டு, எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் தனிமைப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதைப்போல 17ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details