தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் - குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - etv news

தூத்துக்குடியில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் -  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் - குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

By

Published : Jun 21, 2021, 9:23 PM IST

தூத்துக்குடி: குருஸ்புரத்தைச் சேர்ந்த ட்ருமேன் மனைவி ஜூலியட் (40). முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (38). இருவரும் மதுரை, திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஜூலியட், கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.

இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ், விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜூலியட்டை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஜூலியட்டை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை பெண்களுக்கான சிறப்பு சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காதலித்து ஏமாற்றிய நபரின் நண்பர்களை கொல்ல முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details