தூத்துக்குடி: முள்ளக்காடு அருகே சாமி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவர் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இவர் இறந்து விட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 11 நாள்கள் கழிந்த நிலையில், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இதற்கிடையில், சவுதி அரேபியாவில் தனது கணவர் அந்தோணி ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை உடனே மீட்டுத் தர வேண்டும் என்றும், அவரது மனைவி ஜெயமாரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.