தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே விலை உயர்ந்த பொருள் காரில் கடத்தி வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் உடன்குடி புதுமனை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்ததில் காரில் மூன்று பிளாஸ்டிக் கவரில், திமிங்கலத்தின் எச்சம் அம்பர்கிரிஷ் இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் அம்பர்கிரிஷ் பறிமுதல் செய்து காரில் வந்த திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த அருள்ஆல்வின் (40), பெனிஸ்டோ (44), வேலு கிருஷ்ணன் (35) ஆகிய மூன்று பேரை பிடித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.