ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அத்தொகுதிக்குட்பட்ட வசவப்பப்புரம், வல்லநாடு, தெய்வ செயல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
'தேர்தலில் துரோகிகளுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும்' - ஓபிஎஸ் சூளுரை - mgr-jayalitha
தூத்துக்குடி: அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்று துரோகம் செய்தவர்களுக்கு, இந்த தேர்தலில் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருந்தது. நிலங்கள் அபகரிக்கப்பட்டது. மின்சார தட்டுபாட்டை போக்க முடியாத நிலை இருந்தது. திமுக எந்த சாதனையும் செய்யவில்லை. மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை பற்றி குறை கூற முடியாமல் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று திமுகவினர் சொல்லி வருகிறார்கள். ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. அதிமுக மிகப்பெரிய ஆலமரம். இந்த இயக்கத்தை ஒரு கோடிக்கும் மேலான தொண்டர்கள் விழுதுகளாக தாங்கி நிற்கின்றனர்.
28 ஆண்டு காலம் நாட்டை ஆளும் பெறும் இயக்கம் அதிமுகதான். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது தேவை இல்லாமல் போயிருக்கும். ஆனால் எம்எல்ஏ அணி மாறியதால்தான், இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தனி அணியாக உள்ளனர். அவர்கள் அணி அல்ல. நமது பிணி. பிணியும் அல்ல சனி. ஆகவே சனி நம்மை விட்டு போய் விட்டது. பல ஆண்டுகளாக நம்மோடு இருந்த அவர்கள் இன்று நமக்கு துரோகம் செய்துவிட்டு தனி அணியாக போய்விட்டனர். இந்த தேர்தலில் துரோகிகளுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.