தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், கனிமொழி எம்பி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
‘செம்மொழிகளில் உயிர்ப்போடு இருப்பது தமிழ் மொழி மட்டுமே’ - கனிமொழி
தூத்துக்குடி: செம்மொழிகளில் உயிர்ப்போடு இருக்கும் மொழி தமிழ் மட்டும்தான், நாம் அனைவரும் தமிழ் மொழியில் பேச பெருமைப்பட வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
அப்போது மாணவர்களிடையே பேசிய கனிமொழி, ‘தமிழ்மொழியில் பேசுவதை நாம் பெருமையாக கருத வேண்டும். லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் இருக்கின்றன. ஆனால் இந்த மொழிகள் அனைத்தும் பேசப்படும் மொழியாக இல்லை. சமஸ்கிருதம் கோயில்களில் பூஜை செய்யும் மொழியாக மட்டுமே உள்ளது. இன்றும் உயிரோடும், உயிர்ப்போடும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மட்டுமே என்ற பெருமை உள்ளது. தமிழின் தொன்மையை மட்டுமின்றி தொடர்ச்சியாக இந்த தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நாம் பாடுபட வேண்டும்’ என தெரிவித்தார்.