தமிழ்நாடு

tamil nadu

மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

By

Published : Mar 18, 2021, 3:43 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மாட்டு வண்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல்செய்தார்.

மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனுத்தாக்கல்
மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனுத்தாக்கல்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் மேட்டு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி கோமதி என்பவர் கோவில்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இதைத்தொடர்ந்து அவர், எட்டயாபுரம் பிரதான சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார். பின்னர், கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

கோமதியின் கணவர் மாரியப்பன், நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி செயலாளராக உள்ளார். மாட்டு வண்டியில் வந்து வேட்பாளர் மனு தாக்கல்செய்ததால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ELECTION BREAKING: தலைவர்கள் தேர்தல் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details