தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார். அப்போது, "ஸ்டாலின் வெற்றிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். நாங்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சொன்னவர்கள் மத்தியில் அதனை வெற்றி இடமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியிருக்கிறார்.
'ஸ்டாலினுக்கு வெற்றிடம், எங்களுக்கு வெற்றி இடம்' - அமைச்சர் கடம்பூர் ராஜு - thoothukudi district news in tamil
ஸ்டாலின் வெற்றிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
'பனங்காட்டு நரிகள் நாங்கள், சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்'- அமைச்சர் கடம்பூர் ராஜு
திமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துகூட கிடைக்காமல் வீட்டுக்குச் செல்லவிருக்கின்றனர். திமுக குடும்பக் கட்சி, திமுகவினர் பல வேஷங்கள் போடுவார்கள். எங்கள் கட்சிக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் வேறு கட்சி தொடங்கிவிட்டனர். அதிமுக யாருக்கும் அஞ்சாது. நாங்கள் பனங்காட்டு நரிகள் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம்” என்றார்.
இதையும் படிங்க:மணியாச்சி கோர விபத்து: காயமடைந்த கூலி தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்