தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 29, 2021, 9:50 AM IST

ETV Bharat / state

தூத்துக்குடியில் பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்

தூத்துக்குடியில் சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

தூத்துக்குடியில் பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்
தூத்துக்குடியில் பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்

தூத்துக்குடி: தெற்கு வீரபாண்டியபுரத்தில் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி, சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் கைக்குழந்தைகளுடன் காலிக்குடங்களை வைத்து நேற்று (ஜூலை 28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் கைது

குடிநீர் பிரச்சினை

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை சார்பில் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதையும் காரணமின்றி நிறுத்தி விட்டனர். தற்போது தண்ணீர் தான் எங்களின்‌ தலையாய பிரச்னையாக உள்ளது அதை மாநகராட்சி தீர்க்க வேண்டும் என ஆவேசமாக கூறினர்.

பெண்கள் கைது

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அனுமதியின்றி போராடட்டத்தில் ஈடுபட்டதற்காக, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து மீளவிட்டானில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சரண்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தெற்கு வீரப்பாண்டியபுரத்தில் குடிநீருக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் அசுத்தமாக உள்ளது. தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் அதை வீட்டு உபயோகதத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று கூறினார்.

போராட்டத்தின்போது, பெண்களை கைது செய்து அழைத்து செல்ல ஒரு பெண் காவலர்கள் கூட பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details