தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜெயலலிதாவை கொன்றது மோடி தான்' - திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் - ஜெயலலிதாவை கொலை செய்தது மோடி தான்

"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கொலை செய்தது மோடி தான்" என விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 8, 2023, 3:51 PM IST

'ஜெயலலிதாவை கொன்றது மோடி தான்' - திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகேவுள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில், திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், 'முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை அந்தக் கட்சியில் அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரை மோடி தான் கொன்றுவிட்டார். காரணம் பிரதமர் வேட்பாளராக நிற்கப் போவதாக கூறியதால், பாஜக-தான் கொன்றுவிட்டது' என்று பகிரங்கமாக தான் குற்றாட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர், 'தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும்' என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:டி.ஆர். பாலு வாங்கிய காருக்கு பணம் தரவில்லை, பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details