தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தியையொட்டி தூத்துக்குடியில் பூக்களின் விலை உயர்வு - Tuticourin district news

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினங்களை முன்னிட்டு தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை கடந்த வாரத்தை விட மூன்று மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

Etv Bharatவிநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை உயர்வு
Etv Bharatவிநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை உயர்வு

By

Published : Aug 31, 2022, 6:11 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம், பேருரணி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் இருந்தும்; மதுரை, திண்டுக்கல், ஊட்டி போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பூக்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31)விநாயகர் சதுர்த்தி தினம் என்பதாலும், அதனைத்தொடர்ந்து முகூர்த்த தினங்கள் வரிசையாக வருவதாலும், தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ இன்று 2000 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போல் மற்ற பூக்கள் மற்றும் பூமாலைகளின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தேவைக்கு ஏற்ப வரத்து குறைந்துள்ளதும், இந்த திடீர் விலையற்றத்தின் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் விலையினை பொருட்படுத்தாமல் பூக்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.

இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மதுரை மல்லி கடும் விலையேற்றம்...

ABOUT THE AUTHOR

...view details