தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடவேண்டும்

தூத்துக்குடி: விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

villagers-gave-petition-to-collector-about-gas-pipelines-through-agricultural-lands-issue

By

Published : Oct 25, 2019, 3:36 AM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அப்பகுதியில் விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கப்படும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர்.

விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு

இதுகுறித்து குலையன்கரிசல் விவசாய சங்க ஆலோசகர் ஃபாத்திமாபாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், குலையன்கரிசல் பகுதியில் விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அளிக்கக்கூடியது. விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனை பாதிக்கும். விவசாய நிலங்களின் வழியே குழி தோண்டி எரிவாயு குழாய் பதிக்கும்போது நிலத்தின் உவர் தன்மையானது கெட்டுப்போய் விடும். ஏற்கனவே உணவு உற்பத்தி சீர்கெட்டுள்ள நிலையில் நிலமும் உவர்த்தன்மை அடைந்துவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்களின் வழியே மேற்கொள்ளக் கூடாது. மாறாக மாற்றுப்பாதையில் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பாத்திமா பாபு செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை - நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details