தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நடிகர் விஜய் இதற்கெல்லாம் அஞ்சக்கூடாது’ - சீமான் அறிவுரை - ntk seeman

தூத்துக்குடி: ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்காக வன்மம் வைத்து அதிமுக அரசு தற்போது அவரது திரைப்படத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman

By

Published : Oct 24, 2019, 11:12 AM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக்கொண்டு தான் தமிழ்நாடு அரசு அவரை பழிவாங்குகிறது.

விஜய் பேசிய கருத்துக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. அரசின் இந்தச்செயல் இன்றைய தலைமுறையினரிடையே ஜனநாயகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கும். செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நடிகர் விஜய் இதற்கெல்லாம் பயப்படக்கூடாது - சீமான்

இதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது" என்றார்.

மேலும், கோதுமை, பார்லி உள்ளிட்ட பொருட்களுக்கு அகவிலை உயர்த்தப்படுவது குறித்து சீமான் கூறுகையில், "வரிவிதிப்பு, நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டது. வரி விதிப்புக்கு எதிராக நாங்கள் போராடியபோது தேசத்துரோகி என்று கூறினார்கள்.

அடித்தட்டு மக்களைப்பற்றி ஆட்சியாளர்கள் சிந்திப்பதே இல்லை - சீமான்

இந்த ஆட்சியாளர்கள் நம்மை வாங்கும் திறனற்ற மக்களாக மாற்றிவிட்டார்கள். பண்டிகை நாட்களில் 200 விழுக்காடு விற்பனையான இடத்தில் தற்போது 80 விழுக்காடு தான் விற்பனையாகிறது. அடித்தட்டில் உள்ள 60 விழுக்காடு மக்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. பெரும் முதலாளிகளின் நலனை கருதில் கொண்டே இவர்கள் செயல்படுவார்கள். ஆகவே கோதுமை, பார்லி விலை உயர்வை பற்றி நாமெல்லாம் சிந்திக்கவே முடியாது'' என்றார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கிய தமிழக அரசு!

ABOUT THE AUTHOR

...view details