தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலுவலர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு - Thoothukudi latest news

தூத்துக்குடி : சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு தயார்படுத்தும் பொருட்டு அலுவலர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டன.

அதிகாரிகள் முன்னிலையில்  வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு
அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு

By

Published : Mar 4, 2021, 11:23 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்பாக இயந்திரங்களில் உள்ள சீல் அகற்றப்பட்டு வாக்கு சீட்டுகளை அழித்திடும் பணி நடைபெற்றது.

இதனை வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் சுரேஷ், ராமகிருஷ்ணன், சண்முகவேல் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

இதையும் படிங்க :அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details