தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்ட உள்ளது.
ஊரடங்கை மீறி வெளியெ சுற்றி திரிந்தவர்கள் வாகனங்கள் பறிமுதல் - காவல்துறை நடவடிக்கை! - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
தூத்துக்குடி: ஊரடங்கு விதிகளை மீறியதாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் காவல்துறையினர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய பணிகள் செல்பவர்களை தவிர்த்து, ஊரடங்கு நேரத்தில் காரணமின்றி வெளியே வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக எட்டயபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் சோதனை பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பணிகளை தவிர்த்து வரக்கூடிய மற்ற வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், தற்போது வரை ஊரடங்கு விதிகளை மீறியதாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.