தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்தநாள் விழா: பொதுமக்கள் மரியாதை

தூத்துக்குடி: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்தநாள் விழா பாஞ்சாலங்குறிச்சியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

veerapandiya_kattapomman_birthday celebration
veerapandiya_kattapomman_birthday celebration

By

Published : Jan 3, 2021, 3:27 PM IST

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முதல் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 பிறந்தநாள் விழா: பொதுமக்கள் மரியாதை

தமிழ்நாடு அரசு சார்பில் 1974ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோட்டை கட்டப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை

இந்நிலையில் அவருடைய 262ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள கட்டபொம்மனின் உருவ சிலைக்கு கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வீரசக்கதேவி ஆலய குழுவினர் சார்பில் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கட்டபொம்மனின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இதையடுத்து கட்டபொம்மன் பண்பாட்டு குழுவினர் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி யோகராஜ் சுற்றுலா அலுவலர் சீனிவாசன் மற்றும் கட்டபொம்மனின் வம்சவழியினர், சந்ததியர்கள் என ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:கோவிட்-19 பரவலுக்குப் பின் பூரி ஜெகன்நாதர் ஆலயம் மீண்டும் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details