தூத்துக்குடி:அசாம் மாநிலத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்தும், டெல்லியில் பெண் காவலர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையை கண்டித்தும் தூத்துக்குடி விசிக சார்பில் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக வடக்கு மாவட்ட செயலாளர் இக்பால் தலைமை தாங்கினார். சமூக ஆசிரியர் சபரிமாலா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பலரும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து சபரிமாலா செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், காவல்துறையின் சீருடையில் இருந்த ஒரு பெண்ணை டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, உடல் அங்கங்களை சிதைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்பும் அல்லாத ஒரு கட்சி முதல்முறையாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து உள்ளது.