தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்..!’ - தொல். திருமாவளவன் - மின் கட்டணம் குறித்து திருமாவளவன்

ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில், மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

’மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்..!’ - தொள்.திருமா
’மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்..!’ - தொள்.திருமா

By

Published : Jul 31, 2022, 9:28 PM IST

தூத்துக்குடி:பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (ஜூலை 31) காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், ”மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் வகையில் ஜனநாயகத்திற்கு எதிராக அவை தலைவர் செயல்பட்டு வருகிறார்.

இரண்டு அவைகளிலும் 24 உறுப்பினர்கள் கடந்த வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 4 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து இருக்கிறார்கள். இடைநீக்கம் செய்யப்பட்ட 4 உறுப்பினர் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

பாஜக அரசு என்பதற்கு இந்த நடவடிக்கை சான்றாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தக் கூடிய வகையில் மத்திய புலனாய்வு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அரசு, அரசு சார்ந்த தலைவர்களை மத்திய புலனாய்வு நிறுவனங்களை கொண்டு அச்சுறுத்துகிறார்கள். பாஜக அரசு சிபிஐ, அமலாக்க பிரிவு கொண்டு நெருக்கடி தருகின்றனர். பாஜக அரசின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

அதேபோல விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு, விலை வாசி உயர்வு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று விவாதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் அதுதான் ஜனநாயகம். தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவ,மாணவிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக கனியாமூர் பள்ளியில் மாணவி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து இருக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று குடும்பத்தினர் சந்தேகப்படுகின்றனர். அந்த பிணக்கூறாய்வு அறிக்கை அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுவதாக மூத்த வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

தற்போது அந்த விவாதம் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு பள்ளிக்கூடத்தில் தாக்கியது யார்? தீ வைத்தது யார்? வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? என்று இந்த விவாதத்தைத் திசை திருப்புகிறார்கள். மாணவி சாவுக்கு காரணமானவர்களுக்கு துணை போகிறார்கள் என்று பயப்படுகிறோம்.

மேலும், அந்த வன்முறை வெறியாட்டத்தில் பட்டியலின சமூகங்களைச் சார்ந்த இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள், குறிப்பிட்ட கிராமங்களை பெயரைச் சொல்லி அந்தப்பெயரை அந்த கிராமங்களைச் சார்ந்த இளைஞர்கள் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று பதிவு செய்கிறார்கள். ஒருபுறம் புலனாய்வு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மாணவிக்கு உரிய இழப்பீடு வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினருக்கு நீதி வேண்டும். அதே வேளையில் அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆகவே உடனடியாக ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

நேரடியாக முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சதுரங்க போட்டி சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற வேண்டும். தொடக்க விழாவில், பிரதமரை அமரவைத்து தமிழர்களின் பாரம்பரிய வரலாறு குறித்து பாடம் எடுத்தார் முதலமைச்சர்.

அந்த வகையில் முதலமைச்சருக்கு பாராட்டுக்கள். தமிழ்ச் சமூகம் என்பது ஒரு நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் உள்ள நாகரிகம், வளர்ச்சி அடைந்த ஒரு சமூகம் என்பதைத் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் என்எல்சி நிறுவனத்தில் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிற தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்கள் பட்டியலில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இது குறித்து ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரை சந்தித்தபோது நான் என்னுடைய வருத்தத்தை பதிவு செய்தேன். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் தான் என்எல்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற வேண்டும். ஆம்பூர் மாணவி மரணத்திற்கு பின்னர் நடந்த வன்முறையில் உளவுத்துறை குறிப்பாக, காவல்துறை விழிப்பாக இருந்தால் அதை தடுத்திருக்க முடியும். முதலமைச்சர் அது குறித்து உரிய வழிகாட்டுதலை தருவார் என்று நம்புகிறோம்.

தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் குறிப்பாக பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு நடைமுறையைக் கொண்டுவர வேண்டும். அரசாங்க கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அனுமதி இல்லாமலேயே மாணவ விடுதி நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் கருத்து சொல்லி இருக்கிறார். அந்த கருத்தை நியாயப்படுத்த முடியாது. சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும். மின்கட்டணம் உயர்வை திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவலர் சட்டையைப்பிடித்து தாக்கிய அர்ச்சகர்கள்? - திருச்செந்தூர் கோயிலில் வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details