தூத்துக்குடி:விளாத்திகுளம் நாகலாபுரம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி எரிமலை வரதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்குச் சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மறைந்த எரிமலை வரதன் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "பாஜக தலைவர் அண்ணாமலை பெங்களூருவில் காவல் துறை அலுவலராக இருந்தவர். இன்னும் அதே காவல் துறை பார்வையில்தான் பேசிவருகிறார். அரசியல் கொள்கை பற்றி அவருக்குத் தெரியாது" என்றார்.
போதைப்பொருள்கள் விவகாரம்
குஜராத்தில் அதானி துறைமுகத்திலிருந்து போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது குறித்து பாஜக தலைவர்கள் இதுவரை எந்த ஒரு பதிலும் கூறவில்லை என்ற கேள்விக்கு, "இதில் அவர்களே குற்றச்சாட்டில் இருக்கும்போது அவர்கள் எப்படி பதில் கூற முடியும். மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய முதல் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது" என பதிலளித்தார்.
துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, "இரண்டு ஆண்டு காலமாக எனக்கே தெரியாமல் கட்சிக்காரர் வீடுகளுக்கு சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி எனப் போய்வந்தார். கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உடல்நலக் குறைவு எனத் தகவல் கேட்டாலும் சென்றுவந்தார். சிகிச்சைக்கு உதவி செய்துவந்துள்ளார். இது எனக்குத் தெரியாது.