தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி எம்பி-க்கு ஆதரவாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டியில் பரப்புரை செய்தார்.
'பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை' - வைகோ! - பிஜேபி
தூத்துக்குடி: "மோடி அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அம்பானி நிறுவனமும், எஸ்.ஆர் நிறுவனமும் ஆயிரக்கணக்கான கோடி லாபம் பெற்றிருக்கிறது" என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, எந்த சமயத்திற்கும் எதிரானது அல்ல. விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு பணம் கிடைக்காததால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி, கோவில்பட்டி மண்ணில் ஆதரவாக முழக்கமிட்டேன். இந்த மோடி அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. அம்பானி நிறுவனத்திற்கும், எஸ்.ஆர். நிறுவனத்திற்கும் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் லாபம் பெற்றிருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.