கரோனா தொற்றை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே சரியான ஆயுதம் என்பதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் எல்லா மருத்துவமனைகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நகரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.