தூத்துக்குடியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதில் திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த டிலேட்டா என்பவர் தனது மூன்று குழந்தைகளுடன் மனு அளிக்க வந்திருந்தார்.
மீண்டும் தென்மாவட்டங்களில் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை - பெண் மனு! - ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி: பெண் ஒருவர் வாங்கிய கடனுக்கு அவரது வீட்டையே கந்துவட்டி கும்பல் ஆக்கிரமித்து கொண்டதாகத் தெரிகிறது. அதனால் அப்பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், " அமலிநகர் வடக்கு தெருவில் நான் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். தனக்கு பாத்தியப்பட்ட வீடு மணப்பாட்டில் உள்ளது. தினமும் மீன் வியாபாரம் செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறேன். இந்நிலையில், வல்லம் வாங்கி தொழில் செய்வதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு மணப்பாடைச் சேர்ந்த மலர்விழியிடம் ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்தை கடனாக வாங்கி இருந்தேன். அதற்கு 5 சதவிகித வட்டி மாதந்தோறும் கட்டிவந்தேன். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வட்டி பணத்தை தன்னால் கொடுக்க முடியவில்லை. இதனால், மலர்விழி தன்னையும் தனது குழந்தைகளையும் வீட்டிலிருந்து வெளியே துரத்தி, வீட்டுக்குப் பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து பலமுறை மலர்விழியிடம் முறையிட்டும் அவர் தனது வீட்டின் சாவியை கொடுக்க மறுத்துவிட்டார். மேலும் அடியாட்களை வைத்து தன்னையும், தனது குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார். பின்னர், கந்துவட்டி கொடுமை காரணமாக மூன்று குழந்தைகளும் தற்போது பள்ளிக்குச் செல்லவில்லை. எனவே, தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட தனது வீட்டை மீட்டு குழந்தைகளின் கல்விக்கு வழிவகுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.